புத்தாண்டே வா
உலகத் தமிழர்களின் உன்னத வாழ்வில் - புதிய உணர்வூட்ட வரும் தமிழ்ப் புத்தாண்டே வா!மருண்டு கிடக்கும் தமிழர்ப் வாழ்வில் - மறு மலர்ச்சியூட்ட வரும் தமிழ்ப் புத்தாண்டே வா!வறண்டு கிடக்கும் உழவர் வாழ்வுதனில் வறட்சி போக்க தமிழ்ப் புத்தாண்டே வா!ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீர்ந்து இனிதே வாழ - வாழ்த்திட தமிழ்ப் புத்தாண்டே வா!ஆங்கில மோகத்தில் அமிழ்ந்து கிடக்கும் தமிழன் மயக்கம் தீர்க்க தமிழ்ப் புத்தாண்டே வா!வந்தாரை வாழவைத்து தாம் வாழா தமிழ்ச்சமுதாயம் தழைத்தோங்கி வாழ்ந்திட தமிழ்ப் புத்தாண்டே வா!அன்புடன்அரசு
மறக்க முடியாத நிகழ்வுகள் - 1
1998 ஆம் ஆண்டு மே 24, சிங்கையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியாவிமானம் மூலம் வந்துகொண்டிருந்தேன். விமானதினுள் ஏதோ ஒரு தமிழ் திரைப்படம் ( படப்பெயர் நினைவில்லை ) காண்பித்தார்கள். நானும் படத்தை பார்க்க தொடங்கினேன். ஆனால் என்னால் படத்தின் ஒலியை கேட்கமுடியவில்லை. என் அருகிலிருந்தவர்களை பார்த்தேன் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டும் அவ்வப்போது படத்தை பார்ப்பதுமாக இருந்தார்கள். சரி விமானத்தில் ஊமை படம் தான் பார்க்கவேண்டும் போல என நினைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றபிறகு திரும்பி பார்த்தால் அவர்களின் காதுகளில் ear phone ( தமிழில் என்னங்க ) வைத்திருந்தார்கள். பின்பு நானும் அதை தேடி எடுத்து காதில் மாட்டிக்கொண்டு ஒலியுடன் படம் பார்த்தேன். நான் சிங்கை சென்றபோது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றேன் அதில் திரைப்படம் காண்பிக்கமாட்டார்கள் ஆகையால் இது பற்றி தெரியவில்லை.அன்புடன்அரசு
குறுங்கவிதை
நான் பார்த்தேன்அவள் பார்த்தாள் - பின் நிலம் பார்த்தேன்காரணம் என்னை - என்மனைவி பார்த்தாள்***************************மாலை நேர இளங்காற்றில்வேப்ப மரம் தலையசைக்கஅம்மா கூறினாள் குழந்தையிடம்அந்த மரத்தில் பேய்.***************************அன்புடன்அரசு
செல்லமாய் ஒரு சாரல்
தண்ணீர் குடம் தாங்கிதங்கமயில் நடக்கையிலேதளும்புவது தண்ணீர் மட்டுமாஎன் மனசும் தான்.தண்ணீர் குடம் தூக்கிமுன்னே நீ நடக்கையிலேஉன் இடையோடு இணைந்துஎன் இதயம் ஆடுதடி ஊஞ்சல்.தண்ணீர் தளும்பும்போதுசெல்லமாய் ஒரு சாரல்என் இதயத்தை நனைக்குதடிஎன்னை உன்னிடம் இழுக்குதடி.அன்புடன்அரசு
தேர்தல் திருவிழா எங்கள் ஊரில் திருவிழாதேர்தல் திருவிழாநூறு ரூபாய் பணத்திற்கோசில்வர் குடத்திற்கோஎங்களை நாங்களேஅடகுவைத்துக்கொள்ளும் திருவிழாஇந்த திருவிழாவிற்கோர் சிறப்புண்டுஇறந்தவர்களும் உயிர்த்தெழுந்து கொண்டாடும்உன்னதப் பெருவிழாஇந்தத் திருவிழாஐந்தாண்டுகளாய் எங்களை ஏறிமிதித்தவர்கள் எங்கள்கால்களில் விழுந் தெழும்ஒரு மலர்விழா.அன்புடன்அரசு