அட, நீங்களா! வாங்க! வாங்க!

Monday, June 12, 2006


தேர்தல் திருவிழா

எங்கள் ஊரில் திருவிழா
தேர்தல் திருவிழா

நூறு ரூபாய் பணத்திற்கோ
சில்வர் குடத்திற்கோ
எங்களை நாங்களே
அடகுவைத்துக்கொள்ளும் திருவிழா

இந்த திருவிழாவிற்கோர் சிறப்புண்டு
இறந்தவர்களும் உயிர்த்தெழுந்து கொண்டாடும்
உன்னதப் பெருவிழா
இந்தத் திருவிழா

ஐந்தாண்டுகளாய் எங்களை ஏறி
மிதித்தவர்கள் எங்கள்
கால்களில் விழுந் தெழும்
ஒரு மலர்விழா.

அன்புடன்
அரசு

1 Comments:

  • At 9:05 PM, Blogger நாமக்கல் சிபி said…

    //இந்த திருவிழாவிற்கோர் சிறப்புண்டு
    இறந்தவர்களும் உயிர்த்தெழுந்து கொண்டாடும்
    உன்னதப் பெருவிழா
    இந்தத் திருவிழா
    //

    :))

    அது சரி!

     

Post a Comment

<< Home