அட, நீங்களா! வாங்க! வாங்க!

Monday, June 12, 2006

புத்தாண்டே வா

உலகத் தமிழர்களின்
உன்னத வாழ்வில் - புதிய
உணர்வூட்ட வரும்
தமிழ்ப் புத்தாண்டே வா!

மருண்டு கிடக்கும்
தமிழர்ப் வாழ்வில் - மறு
மலர்ச்சியூட்ட வரும்
தமிழ்ப் புத்தாண்டே வா!

வறண்டு கிடக்கும்
உழவர் வாழ்வுதனில்
வறட்சி போக்க
தமிழ்ப் புத்தாண்டே வா!

ஈழத் தமிழர்களின்
இன்னல்கள் தீர்ந்து
இனிதே வாழ - வாழ்த்திட
தமிழ்ப் புத்தாண்டே வா!

ஆங்கில மோகத்தில்
அமிழ்ந்து கிடக்கும்
தமிழன் மயக்கம் தீர்க்க
தமிழ்ப் புத்தாண்டே வா!

வந்தாரை வாழவைத்து
தாம் வாழா தமிழ்ச்சமுதாயம்
தழைத்தோங்கி வாழ்ந்திட
தமிழ்ப் புத்தாண்டே வா!



அன்புடன்
அரசு

2 Comments:

  • At 3:48 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் அரசு

    வலைப்பதிவுலகில் நட்புடன் வரவேற்கிறேன்.

     
  • At 1:36 PM, Blogger சேதுக்கரசி said…

    தமிழ்மணத்தில் சேர்ந்துட்டீங்களா? :-) அப்படியே மறுமொழியப்பட்ட இடுகைகளிலும் வர்றமாதிரி செஞ்சிடுங்க.. அப்புறம் என்ன... கலக்குங்க :-)))

     

Post a Comment

<< Home